உத்தராகண்ட்டில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஸ்ரீநகர் – ருத்ரபிரயாக் இடையேயான பத்ரிநாத் நெடுஞ்சாலை நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. உத்தராகண்ட மாநிலம் சாமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ருத்ரபிரயாக்கில் அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கரையோரக் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
மேலும், ஸ்ரீநகர் – ருத்ரபிரயாக் இடையேயான பத்ரிநாத் நெடுஞ்சாலைத் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.