திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு உதவிய பாஜகப் பெண் நிர்வாகியைத் திமுக நகர்மன்ற தலைவி தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை சேர்ந்த பாஜகப் பெண் நிர்வாகி பரமேஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள பெண்களை ஒன்றினைத்து மகளிர்ச் சுய உதவிக் குழு அமைத்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு வங்கியில் கடன் பெறவும் அவர் உதவி செய்துள்ளார். இதனையறிந்த திமுக நகர மன்ற தலைவி உமா மகேஷ்வரி என்பவர், பரமேஸ்வரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கும் வகையில் பேசினார்.
கடன் உதவி பெறுவதற்கு உதவுவதாகக் கூறி பாஜகவிற்கு வேலைச் செய்வதாக பரமேஸ்வரி மீது குற்றம்சாட்டிய உமா மகேஷ்வரி, இது திமுக அரசு தானே தவிரப் பாஜக அரசு இல்லை எனவும் கடிந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களை நேரடியாக அணுகும் வகையில் தெருவுக்குள் நுழைந்தால் கட்டி வைத்து விடுவேன் எனவும்பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
மகளிருக்கு உதவி செய்த காரணத்தால் பாஜக நிர்வாகியை திமுக நகர மன்ற தலைவி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.