விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதைச் செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஓவியா என்ற ஏழு வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்துச் சிறுமியின் வீட்டார் ஒப்புதலுடன் அவரது உடலுறுப்புகள் கோவைக் கே.எம்.சி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சொந்த ஊரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.