எகிப்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய தரைக்கடலை ஒட்டிய மேற்கு மாகாணமான மேட்ரோஃபில் இருந்து தலைநகர் கெய்ராவுக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்தனர். அப்போது ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி தவித்த காயமடைந்தவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை மீட்பு படையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.