பிறப்பு விகதச் சரிவு மேற்கத்திய நாடுகளுக்கு முதன்மையான அச்சுறுத்தல் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அளவில் மக்கள் தொகை குறைவு குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மக்கள் தொகை குறைவு மனிதக் குலத்திற்கே பேராபத்து என்றும் அவர் கூறி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிறப்பு விகிதச் சரிவு மேற்கத்திய நாடுகளுக்கு முதன்மையான அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வெளிநாட்டினரின் குடியேற்றம் தொடர்ந்தால் மேற்கத்திய நாடுகள் இருக்காது என்றும் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.