ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானுவேல் சேகரன் குருபூஜை செப்டம்பர் 11ஆம் தேதியும், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதியும் கடைபிடிக்கப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், குருபூஜை விழாக்களின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 144 தடை உத்தரவு காலங்களில் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.