தனது முதல் பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டோல்ஸ் வென்டோ சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
துருக்கியின் மெடில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் இந்த டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல் கட்டப்பட்டது. 24 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சொகுசு கப்பல் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டது.
இந்நிலையில் கப்பல் தனது முதல் பயணத்தை மெடில்மாஸ் கடற்கரையில் தொடங்கியது. ஆனால் பயணத்தைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த ஊழியர்கள் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி சென்று உயிர் தப்பினர்.