ராஜஸ்தான் மாநிலம் சுருவில் பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் தேஜா தசமி, பாரம்பரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தேஜா தசமியையொட்டி கோகாஜி கோயிலில் மக்கள் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் கைகளில் பாம்பு மற்றும் உடும்பினை வைத்து உற்சாக நடனமாடி விநோத வழிபாடு நடத்தினர். எந்தவித அச்சமும் இன்றிக் கைகளில் பாம்புகளை வைத்து நடனமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.