தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோயிலில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி பெரியகோயிலில் உள்ள மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது திரவிய பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து முடித்த பின்னர் மஹாநந்தியம் பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.