மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள ஹிருதயபூர்வம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.
சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
திரைப்படம் ஒரு ஃபீல் குட் உணர்வை தருவதால் படத்தை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். இதனால் ஹிருதயபூர்வம் படம் உலகளவில் 50 கோடியை கடந்துள்ளது. இதனை மோகன்லால் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.