தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 43 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்ததால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு 42 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.