தென்கொரியாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் அக்டோபர் இறுதியில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கவுள்ளது. ஜியாங்சு நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், தென்கொரியா செல்லும் அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின்போது இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை, சீனாவுக்கு வரும்படி கடந்த மாதம் தொலைபேசி மூலம், சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.