வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றியமைத்தார்.
அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது, வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவற்றை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.