ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த காளான் கொலைகாரி என்று அழைக்கப்படும் பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தின் லியோங்காதா பகுதியை சேர்ந்தவர் 50 வயதான எரின் பேட்டர்சன். இவரும் கணவர் சைமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு சிறப்பான விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி சைமனை அழைத்துள்ளார் எரின்.
ஆனால் சைமன் அதனை தவிர்த்த நிலையில் எரினின் வலையில் சைமனின் பெற்றோர் டொனால்ட் பேட்டர்சன், கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் அவரது கணவர் இயன் வில்கின்சன் ஆகியோர் சிக்கினர்.
விஷக் காளான்கள் கலக்கப்பட்ட மாட்டிறைச்சி உணவை உண்டதால் இயன் வில்கின்சன் தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவை உலுக்கிய இந்த வழக்கில் நடுவர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து காளான் கொலைகாரி என்ற அழைக்கப்படும் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.