நேபாளத்தின் காத்மாண்டுவில் இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி நடத்தப்படும் தேர் ஊர்வலத்தைக் காண ஏராளமானோர் குவிந்தனர்.
நேபாளத்தில் மழையின் கடவுளான இந்திரன் மற்றும் வாழும் தெய்வமான குமாரி ஆகியோரை கொண்டாடும் ஒரு வாரக் கால நிகழ்வு இந்திர ஜாத்ரா என அழைக்கப்படுகிறது.
அப்போது விழாவின் ஒரு பகுதியாக, வாழும் தெய்வமான குமாரி, மனித வடிவில் தேரில் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில் நடப்பாண்டு நடைபெறும் இந்திர ஜாத்ரா திருவிழாவுக்காகக் காத்மாண்டுவில் உள்ள பசந்தபூர்த் தர்பார் சதுக்கத்தில், மனித உருவம் பொருந்திய தேர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதனைக் காணக் குவிந்த ஏராளமான மக்கள், மழை மற்றும் வளமான அறுவடைக்காக இந்திரனுக்கு நன்றிச் செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.