உணவகத்தில் நேரில் வாங்கிய 4 உணவுகளுக்கான விலை, ஸ்விக்கியில் ஆர்டர் செய்தபோது பலமடங்கு அதிகமாக இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த சுந்தர் என்பவர் அருகில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உணவகத்தில் ஸ்விக்கிச் செயலி மூலம் உணவுகளை ஆர்டர் செய்தார்.
10 பரோட்டாக்கள், சிக்கன் 65, சிக்கன் லாலிபாப்ஸ் மற்றும் சிக்கன் தொக்கு பிரியாணி ஆகிய உணவுகளுக்கு மொத்தம் ஆயிரத்து 473 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் அதே பொருட்களை உணவகத்திற்கு நேரில் சென்று வாங்கியதில் வெறும் 810 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது.
2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக 663 ரூபாய் செலவு செய்துள்ளதாகச் சமூக வலைதளத்தில் சுந்தர் புலம்பி தீர்த்துள்ளார்.