செய்யாறு அருகே வாங்கிய கடனை திருப்பி தரக்கோரி தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், விவசாயி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள தூசி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் 22 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கூடிய பணத்தை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகக் கடன் தவணையை ராஜேந்திரன் முறையாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ராஜேந்திரன் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் கடனைக் கட்ட சொல்லி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த ராஜேந்திரன் விவசாய நிலத்திற்குச் சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தனியார் வங்கி ஊழியர்களின் மிரட்டலால் தனது தந்தை உயிரிழந்ததாக அவரது மகன் குற்றம்சாட்டியுள்ளார்.