ஐநா சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்துக்கு இந்திய தூதர் தக்க பதிலடி கொடுத்தார்.
ஐநா சபையின் 80-வது பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நியூயார்க்கில் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதிநிதி ஒருவர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்த இந்திய தூதர் சிட்டிஜ் தியாகி, இந்தியா மீது ஆதாரமற்ற மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுவிட்சர்லாந்து முன்வைப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அறிவுரை வழங்குவதற்கு பதிலாக சொந்த நாட்டில் நிலவும் இனவெறி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சுவிட்சர்லாந்து தீர்வு காண வேண்டும் எனவும் காட்டமாக கூறினார்.