பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துமகுரு சாலையில் உள்ள பீன்யா அருகே பிஎம்டிசி பேருந்து வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் மற்றும் பெண் பயணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த நடத்துனர் மற்றும் சகபயணிகள் இருவரையும் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் மற்றும் தாக்குதலுக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போக்குவரத்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.