கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!
Oct 9, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸ் நாட்டின் Safron நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உள்நாட்டிலேயே அதிநவீனப் போர் விமான என்ஜின்களை உருவாக்க உள்ளது. இந்தப் போர் விமான என்ஜின்கள், இந்தியா தயாரிக்கும் 5-ஆம் தலைமுறை Advanced Medium Combat Aircraft போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளன. போர் விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடையும் இந்தியாவின் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

விண்வெளித் துறையில் மிகவும் கடினமான மற்றும் உயர்  துல்லிய தொழில்நுட்பங்களில் போர் விமான என்ஜின் ஒன்றாகும். செயற்கைக்கோள்களை வடிவமைப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவுக்கு, போர் விமான என்ஜின் உற்பத்தி தொழில்நுட்பம் கை  கூடாமலேயே இருந்தது.

காவேரி என்ஜின் திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு உள்நாட்டுப் போர் விமான என்ஜினை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. 1989ம் ஆண்டு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் இலகுரகப் போர் விமானத்தை (LCA) இயக்கும் நோக்கம் கொண்டதாகும்.

சுமார் 100 கிலோ நியூட்டன் உந்துதலை உருவாக்கும் வகையில் இலகு ரக மற்றும் நடுத்தர வகுப்பு போர் விமானங்களுக்கு ஏற்ற வகையில் காவேரி எஞ்சின்களை DRDOவடிவமைத்துள்ளது. எனினும், இந்தக் காவேரி என்ஜின் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனால், தேஜஸ் Mk1 போர்விமானத்தில் GE F404 என்ஜினையும், தேஜஸ் Mk2 ஆகிய போர்விமானங்களில், சக்தி வாய்ந்த அமெரிக்காவின் GE F414 என்ஜினையும் நம்பி இருக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில், GE Aerospace நிறுவனம் தனது என்ஜின்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

தனது முழு கட்டுப்பாட்டில்,போர் விமான திட்டத்தை வைத்திருக்க வேண்டுமானால், இந்தியா உள்நாட்டிலேயே போர்விமான என்ஜினை தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், காவேரி என்ஜினை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் மற்றும் விநியோகச் செய்யவும் பிரான்ஸுடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.

இந்தியாவின் Gas Turbine Research Establishment நிறுவனமும், பிரான்ஸின் Safran நிறுவனமும் இணைந்து போர்விமான என்ஜின்களைத் தயாரிக்க உள்ளன. இந்தத் திட்டம் முழுமையாக இந்தியாவின் அறிவுசார் உரிமைகள் (IPR) கீழ் நடைபெற உள்ளது. முக்கியமாக, கிரிஸ்டல் பிளேடு (Crystal Blade) தொழில்நுட்பம் உட்பட தனது அனைத்துத் தொழில்நுட்பங்களையும், முழுமையாக 100 சதவீதம் DRDO-க்கு சஃப்ரான் நிறுவனம் ஒப்படைக்கவுள்ளது.

இதன் மூலம் 120 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட போர் விமான என்ஜின்கள் உருவாக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளன. 12 ஆண்டுகளுக்குள் ஒன்பது முன்மாதிரி போர் விமான என்ஜின்களை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 140 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட போர் விமான என்ஜின்கள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் 5வது தலைமுறை  போர் விமானம், இரட்டை என்ஜின் போர் விமானங்கள் மற்றும் எதிர்கால ட்ரோன்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. மேலும், இது ஒரு போர் விமானத்தை மட்டும் பற்றியது அல்ல. நாட்டின் முழு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்தும் தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை  பாரதத்தின் திறனைப் பற்றியது ஆகும்.

Tags: இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்indian airforceFrance lends a helping hand: Fighter jet engine to be manufactured in India
ShareTweetSendShare
Previous Post

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

Next Post

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி – பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies