திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆண்டுதோறும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டடத்தில் பாமக சார்பில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஏற்பாடுகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸின் ஆதரவாளர்கள் கட்டடத்தை பூட்டினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், பழமையான கட்டடம் என்பதால் பாதுகாப்பு கருதி சீல் வைப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி போலீசாரின் பாதுகாப்போடு வன்னியர் சங்க கட்டடத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.