ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக உலகின் முதல் AI அமைச்சர் டியல்லா, அல்பேனியாவில் பொறுப்பேற்றுள்ளார்.
உலகம் முழுவதும் AI செயல்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. AI ரோபோக்கள், நாய்கள் போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகளும் முளைத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அல்பேனியாவில் அமைச்சராக AI பொறுப்பேற்றுள்ளது.
அல்பேனிய பிரதமர் எடி ராமா, பொது டெண்டர்களை மேற்பார்வையிட உலகின் முதல் AI அமைச்சரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாரம்பரிய அல்பேனிய உடையை அணிந்த ஒரு பெண்ணைப் போல இந்த AI அமைச்சர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் மற்றும் அரசின் சேவைகளை வழங்கும் அதிகாரப்பூர்வ தளத்தை குடிமக்கள் பயன்படுத்த உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
AI அமைச்சரின் செயல்முறையை ஊழல் இல்லாத அரசை உருவாக்கும் எனப் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.