காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் ஈக்வடார் மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 86 பேர் உயிரிழந்தனர்.
அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் லுகோலேலா பிரதேசத்தில் 500 பயணிகளுடன் சென்ற படகு தீப்பிடித்துக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 107 பேர் உயிரிழந்த நிலையில், 209 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.