நேபாளத்தில் வன்முறையால் காயமடைந்தவர்களை இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி சந்தித்தார்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்கள் முடக்கம் மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
இதையடுத்து அதிபர், பிரதமர் பதவி விலகியதால் இடைக்கால பிரதமராகச் சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த சுசீலா காா்கி, போராட்டங்களில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.