நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் பதிவியேற்றனர்.
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நேபாளத்தில் கடந்த வாரம் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தை அடுத்து, பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். நேபாளத்தின் இடைக்கால பிரதமராக, முன்னாள் தலைமை நீதிபதி சுஷீலா கார்கி பதவியேற்றார்.
இந்நிலையில் அவரது அமைச்சரவையில் நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மான் கிசிங், முன்னாள் நிதி மந்திரி ராமேஷ்வர் கானல் மற்றும் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆர்யல் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.