ஆஸ்திரேலியால் கடல் மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 10 லட்சம் மக்கள் ஆபத்தில் உள்ளனர். காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடல்நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் உயர்ந்து சுமார் 10 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரமான சிட்னியில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் இறப்பு எணணிக்கை 400 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், காலநிலை மாசுபாட்டை வேகமாகக் குறைப்பதன் மூலம் இந்தப் பேரழிவை தடுக்க முடியும் எனக் கூறுகின்றனர்.