தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் போத்தீஸ் ஜவுளிக் கடை, மாநிலம் முழுவதும் பல்வேறு கிளைகளை நிறுவி விற்பனை செய்து வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை உரிமையாளர்களின் ஒருவரான ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்ராஜா, அசோக் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறையின் சோதனையில் கணக்கில்வராத 20 கோடி ரூபாய் ரொக்கம், 10 கிலோ தங்கம் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.