நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் என்ஐஏ, சிபிஐ அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களைக் கண்காணித்து அவர்களைக் கைது செய்து வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் ரஷீத் அகமது என்பவரின் மகன் உசைன் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் உள்ள ரஷீத் அகமது வீட்டில் 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேர சோதனைக்குப் பின் வரும் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் NIA அலுவலகத்தில் உசைன் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி அதிகாரிகள் சம்மன் வழங்கிச் சென்றனர்.