பாமகவின் அலுவலக முகவரியை மாற்றி மோசடி நடந்துள்ளதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி ஆதரவு வழக்கறிஞர் பாலு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தேர்தல் ஆணையத்தில் இருந்து எங்களுக்குக் கடிதம் வந்ததால் எதிர்தரப்பினர் பதற்றத்தில் உள்ளனர் என்றும் மோசடியாக முகவரியை மாற்றி விட்டதாக ஜி.கே.மணி கூறியது அபாண்டமான பொய் என்று அவர் கூறினார்.
பாமக அலுவலகத்தைத் தி.நகர்த் திலக் தெருவுக்கு மாற்றி 2022ம் ஆண்டிலேயே கடிதம் கொடுக்கப்பட்டது என்று வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டார்.
பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருமே அன்புமணி பக்கம்தான் உள்ளனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.