அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை.
மூன்று நாள் பயணமாக அதிபர் டிரம்ப் இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி மிடில்டன் ஆகியோரை ட்ரம்ப் சந்திக்கிறார்.
இந்நிலையில் லண்டன் விமான நிலையத்தில் டிரம்ப் வந்திறங்கியபோது அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை.
சாதாரண சாலையில், ஒருசில ராணுவ வீரர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரை சாதாரணமாக வரவேற்று அழைத்துச் சென்றனர். இது உலகளவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.