மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பட்டியலுடன், அவர்களுடைய வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும், புதிய நடைமுறை பீகார் தேர்தல் முதல் அமலுக்கு வரும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடைமுறையில் கடந்த 6 மாதங்களாகப் புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களைப் பதிவிடுவது உட்பட 28 புதிய விஷயங்களைப் புகுத்தி உள்ளதாகவும், ஒரே பெயரில் இருவேறு வேட்பாளர்கள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும் வடிவம் மற்றும் பெயர் உள்ளிட்ட அச்சு விபரங்கள் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தெளிவாக இருக்கும் எனவும், புதிய நடைமுறை பீகார் சட்டமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது