பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் அவருக்கு வாழ்த்து செய்தி ஒளிரவிடப்பட்டது.
பிரதமர் மோடி நேற்று 75வது வயதை எட்டினார். அவருக்கு இந்திய மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுத் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இரவொளியில் புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒளிரவிடப்பட்டு, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக ரீதியிலான உறவு மேம்பட்டு வரும் சூழலில், பிரதமர் மோடியை அந்நாட்டு அரசு கெளரவித்துள்ளது.