சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத் டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பணிகள் உட்பட 36 பேருக்கு ஊசி போடப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்குத் திடீரென உடல்நடுக்கமும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டன.
இதையடுத்து உடனடியாக மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்களின் உடல்நலம் சீரடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2 பேர் மேல்சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே ஊசி செலுத்தப்பட்ட அனைவரின் உடல்நலமும் சீராக இருப்பதாகச் சீர்காழி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ குழுவினரால் அனைவருக்கும் பரிசோதனைச் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந் கேட்டறிந்ததாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.