விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் 2 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர்செவல்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வெடிமருந்து மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு வெடித்துச் சிதறியதில் இரண்டு அறைகள் தரைமட்டமானது.
இந்த விபத்தில் கௌரி என்ற பெண் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பட்டாசு ஆலையின் போர் மேன் சோமசுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.