பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது கடந்த 12ம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது கோல்டி பிரார்க் கும்பலைச் சேர்ந்த ரவீந்திரா மற்றும் அருண் எனத் தெரியவந்தது.
ஆன்மீகத் தலைவர்கள் குறித்து நடிகை திஷா பதானி விமர்சித்ததால், அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது அம்பலமானது.
இதனையடுத்து, காசியாபாத் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நடிகையின் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.