வீடுகளுக்கு மளிகை, ஸ்டேஷனரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் பிளிங்க் இட் செயலியின் ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
பொருட்களை டெலிவரி செய்ய அவர் எடுத்து வந்த வாகனம் மஹிந்திரா தார். இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரவ விட்ட பெண், பிளிங்க் இட்டில் அவ்வளவு சம்பளம் வருகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணையவாசிகளும் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியப்படும் நிலையில், இந்த வீடியோவானது சுமார் 4 லட்சம் ஷேர்களை பெற்றுள்ளது.