மதுரையில் அரசு மகளிர் பேருந்தின் படிகட்டு உடைந்து மாணவர்கள் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி அரசு மகளிர் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் படிகட்டு உடைந்து விழுந்தது. இதனால் படிகட்டில் நின்றுகொண்டிருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்தனர்.
இதில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய போதும், அரசுப் பேருந்துகள் தரமற்று இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில், பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.