வடகொரியாவில் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
பிறமொழி கலப்பைக் குறைப்பதற்காக மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் வேற்றுமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டு, அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் ஐஸ்கிரீம் என்ற சொல்லுக்குப் பதிலாக ‘எசெக்கிமோ’ அல்லது ‘எரெம்போசங்கி’ என்ற வார்த்தைகளை பயன்படுத்த வடகொரிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.