பெங்களூருவின் முக்கிய சாலையில் நபர் ஒருவர் மெத்தை போட்டு படுத்துக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜோசப் பல்கலைக்கழகம் அருகேயுள்ள சாலையில் மர்ம நபர் ஒருவர் மெத்தை போட்டு படுத்துக்கொண்டிருந்தார்.
வாகனங்கள் வருவதையும் பொருட்படுத்தாத அந்நபர், கால் மேல் கால் போட்டபடி படுத்திருந்தது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரப் போலீசார் தெரிவித்தனர்.