ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அப்பகுதி மக்களை உலுக்கியது.
ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின.
இந்த நிலநடுக்கம், காம்சட்காவிற்குக் கிழக்கே 128 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் அது திரும்பப் பெறப்பட்டது. இதனால் அச்சத்தில் உறைந்த மக்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
















