அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னி லேண்டில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி கொண்டாட்டங்கள் களைகட்டின.
பேய்கள் திருவிழா எனும் ஹாலோவீன் டே ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த பூர்வகுடிகளாக அறியப்படும் செலிட்டிக் இனத்தவர்கள், வெயில் காலத்தை அறுவடை திருவிழாவாக கொண்டாடினர்.
அதோடு, குளிர்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் முன்னோர்களிடம் தங்களை இணைத்துக் கொள்ளும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்டில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி திகிலூட்டும் வகையில் விதவிதமான அணிவகுப்புகள் நடைபெற்றன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக் கணக்கானோர் ஹாலோவீன் திருவிழாவில் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.