பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாரதப் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, மக்களுக்கான தீபாவளிப் பரிசாக இன்று முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க GST சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த வரலாற்றுச் சீர்திருத்தத்தை நிறைவேற்றியதற்காக நமது மாண்புமிகு பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டுமொரு முறை எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் சேர்ந்து, அனைத்து தமிழக பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் உள்ள தங்கள் DP மற்றும் Cover Photo-வை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களாக மாற்றி நமது பிரதமருக்கு நன்றி தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சீர்திருத்தத்தினைப் போற்றிக் கொண்டாடுவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.