திருப்பூர் மாவட்டம், உப்பிலிபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உப்பிலிபாளையத்தில் கோழிப்பண்ணை கட்டுமான பணியின்போது சுவர் சரிந்து விழுந்தது. இதில் கட்டட தொழிலாளர்களான ரமேஷ், சிலுவை அந்தோணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதனையடுத்து இருவரது உடலும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.