சார்லி கிரிக்கை கொலை செய்தவரை மன்னிப்பதாக அவரது மனைவி எரிக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசி கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு ஒன்று அவரது கழுத்தில் பாய்ந்து உயிரைப் பறித்தது.
இந்த நிலையில், அரிசோனாவில் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று சார்லி கிர்க்கின் மனைவியை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து பேசிய சார்லி கிரிக்கின் மனைவி எரிக், தனது கணவரை கொன்றவர்களை மன்னிக்கிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். கணவரைக் கொன்றவரை மன்னித்த அவரது உயர்ந்த தன்மைக்கு அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.