சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது 42 வயதான ஜாங் ஜான் என்ற சீன பெண் பத்திரிக்கையாளார் கொரோனா பரவல் குறித்து வூஹான் நகரில் இருந்து வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெரிசலான மருத்துவமனைகள், வெறிச்சோடிய தெருக்கள் அடங்கிய காணொளிகள் உள்ளிட்ட பதிவுகளை அவர் வெளியிட்டார்.
இதனால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முன்றதாக கூறி அவர் மீது சீன அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாங் ஜானுக்கு டிசம்பர் 2020-ல் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்கான உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை சீனாவில் தான் உள்ளது. இதில் சுமார் 124 பத்திரிகையாளர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.