நவராத்திரியையொட்டி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய கர்பா நடனம் அரங்கேற்றப்பட்டது.
கர்பா நடனம் என்பது குஜராத்தில் தோன்றிய நாட்டுப்புற நடன வகைகளில் ஒன்றாகும். இந்த நடனம் பெரும்பாலும் நவராத்திரியின்போது, பெண்ணின் தெய்வீக வடிவத்தை போற்றும் விதமாகவும், ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அரங்கேற்றப்படுகிறது.
இது உலகம் முழுவதும் உள்ள குஜராத்தி மக்களால் ஆடப்படும் ஒரு மகிழ்ச்சியான நடனமாக விளங்குகிறது.
இந்த நடனத்தை மக்கள் எரியும் தீப்பந்தங்களுடன் வெறுங்கால்களுடன் நிகழ்த்துகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரியையொட்டி, குஜராத் மாநிலம் ஜாம் நகரில் மக்கள் ஒன்றிணைந்து கர்பா நடனத்தை அரங்கேற்றினர்.