உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை ஒட்டி மலர் கண்காட்சி களைகட்டியுள்ளது.
கர்நாடகத்தின் நாடஹப்பா என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க 415-ம் ஆண்டு தசரா விழா திங்கட்கிழமை தொடங்கியது. இத்திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
மைசூரு நகர் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. தசரா விழாவை மேலும் மெருகேற்றும் விதமாக மலர் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு வண்ண வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகக் காந்தியடிகளுக்காக மண்டபம்போல் உருவாக்கிப் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட நந்தியம் பெருமான், பல்வேறு வகையான மலர்களால் தாய் டால்பின், குட்டி டால்பின், முயல் என விதவிதமாக வடிவமைத்துள்ளனர். இதனை காண்பதற்காகக் கூட்டம் அலைமோதுகிறது.