துபாயில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, டிரோன்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
துபாயின் அல்பார்ஷாவில் உள்ள 14 மாடி கொண்ட குடியிருப்பு கட்டடத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் 4வது மாடியில் இருந்து தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.
டிரோன்கள் உயர பறந்து தீயை அணைக்கும் காட்சி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.