திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டிற்கான பிரமோற்சவத்தை ஒட்டி, புதிய மஞ்சள் துணியில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி, 4 மாட வீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் வேத மந்திரம் முழங்க, கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா வரும் 2ம் தேதிவரை நடைபெறும். இதையொட்டி, திருப்பதி கோயில் பூக்களால்அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கிறது.