வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர்.
ரிக்டரில் சுமார் 6 புள்ளி 3 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஜூலியா மாநிலத்தில் உள்ள மெனே கிராண்டேவிலிருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில், கராகஸிலிருந்து மேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில், 7.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் கராகஸ் மற்றும் மரக்காய்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், கொலம்பியாவின் எல்லையிலும் உணரப்பட்டது.
கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 6.1 ரிக்டர் எனஅளவிட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை காலி செய்து பதறியடித்து வெளியே ஓடினர்.